அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழில்நுட்பக் கோளாறால் FIR வெளியாகி இருக்கிறது என சென்னை காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், "புதிய குற்றவியல் சட்டத்தால் எப்ஐஆர் தொழில்நுட்ப ரீதியில் லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. FIR வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என பேட்டியளித்துள்ளார்.