மாநில அரசுகள் வாரி வழங்கும் இலவசத் திட்டங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. இதனால், உள்கட்டமைப்புக்கு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு நிதி ஒதுக்கீடு செய்வது கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், 2018 – 19 முதல், மாநிலங்கள் வழங்கும் மானியங்கள் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவை விட 2.5 மடங்கு அதிகரித்து ரூ.4.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.