திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து எடுக்கின்றனர். ஆனால் பிரபலமாக இருக்கும் சில யூடியூபர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு மோசமான திரைப்படங்களை ஆஹா ஓஹோ என பொய்யாக புகழ்வதும், சிறந்த திரைப்படங்களை தாழ்த்தி பேசி மக்களை பார்க்க விடாமல் தடுப்பதும் நடக்கிறது. இப்படியான விஷயங்கள் சினிமா துறைக்கு நிச்சயம் ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதோடு இந்த துறையை அழிவு பாதைக்கு எடுத்து செல்லும் என கூறினால் மிகையாகாது..!