அரசு விடுதிகளில் பெண் காவலாளிகள் - அமைச்சர் கீதா ஜீவன்

55பார்த்தது
அரசு விடுதிகளில் பெண் காவலாளிகள் - அமைச்சர் கீதா ஜீவன்
சென்னை: தாம்பரம் அருகே அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காவலாளி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சென்னையில் இன்று (ஜூன் 9) பேட்டியளித்த அமைச்சர் கீதா ஜீவன், "அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க உள்ளோம். வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்றச் சம்பவம் நடந்துள்ளது. மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி