சென்னை திருமுல்லைவாயிலில் ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜே.ஜே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக இருந்த ஜோதி காமாட்சி (42), நேற்று தண்டவாளத்தைக் கடந்த போது அரக்கோணம் ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கடந்த 2017ம் ஆண்டு ஜோதி காமாட்சியின் கணவர் மாரடைப்பால் காலமான நிலையில், 12 வயது மகனுடன் அவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.