சென்னை கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில், தனது காதலனுடன் வாழ்ந்து வந்த ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து, பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரிடம் இருந்த நகைகள் காணவில்லை என பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், லிவிங் டூ கெதரில் இருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.