தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேலாக சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் உள்ளது. இதனால், பெரிய நிறுவனங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில், 'ரூப் டாப் சோலார்' எனப்படும் குறைந்த திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மின் நிலையம் அமைக்க பலரும் ஆர்வம் காட்டுவதால் தற்போது மின் நிலையங்களின் நிறுவு திறன் 1,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது.