அரசியலில் இது தந்தை-மகன் மோதல் காலம் போல. தமிழ்நாட்டில் ராமதாஸ்-அன்புமணி போல பிஹாரில் லாலுபிரசாத்தும் அவர் மூத்த மகன் தேஜ்பிரதாப்பும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி மகனை 6 வருடங்களுக்கு கட்சியை விட்டு நீக்கினார். லாலு. இந்நிலையில், X தளத்தில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் சிண்டு மூட்டிவிட உள்ளேயே எதிரிகள் இருப்பதாக தேஜ்பிரதாப் பதிவிட்டுள்ளார்.