பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்ட விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் பூமிக் லட்சுமணன் (21) என்ற மாணவரும் ஒருவர். அவரின் உடல் புதைக்கப்பட்ட புதைக்குழி மீது படுத்து தந்தை லட்சுமணன் கதறி அழும் வீடியோ காட்சி வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.