கோவை: கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞர்கள் போலீசார் கைது செய்த நிலையில் கைதான மணி பரத் என்பவரின் தந்தை சேகர், போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து, காவல் நிலையத்தின் முன்பு நேற்று (பிப். 01) தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த சேகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.