புதுக்கோட்டையில் தனது 16 வயது மகளுக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 49 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கூலி தொழிலாளியான இவர், சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை கட்டாயப்படுத்தி மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அவர்கள் அளித்த புகாரின் பேரில், தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.