சுங்கச்சாவடி கட்டணத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், மோசடிகளை தடுத்து தகராறுகளை குறைக்கும் வகையிலும் FASTag பயன்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்களை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகளுக்கு திரைப்பட இயக்குநர் அமீர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமலுக்கு வந்துள்ள FASTag புதிய விதிமுறைகள், மக்களை சுரண்டும் வழி என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.