ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 325 டன் மட்டுமே பச்சை பயறு கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு பச்சை பயறு சாகுபடி 2 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு இதை கொள்முதல் செய்யாவிட்டால், தனியாரிடம் குறைந்த விலையில் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே, தமிழகத்தில் கூடுதல் பச்சை பயறு கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.