திருப்பூர்: பல்லடத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு, விவசாயிகள் ஓரணியில் இணைந்துள்ளனர். போதிய தண்ணீர் இல்லாததால், காய்கறி பயிர், தானியம் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் பலர் தென்னைக்கு மாறினர். இந்நிலையில் பல்லடம் பகுதி ’நீர் செறிவூட்டும் திட்டம்' என்ற பெயரில் கிடப்பில் உள்ள ஆனைமலையாறு நல்லாறு திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க முயல்கின்றனர்.