விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் பாஜக அரசு பல X கணக்குகளை முடக்க அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக சமூக ஊடக தளமான எக்ஸ் (X) இன்று தெரிவித்தது. இந்தியாவில் மட்டுமே இந்தக் கணக்குகள் மற்றும் இடுகைகளைத் தடுப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும், மேலும் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை குறைப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.