சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படுவதாக கூட்டுறவுத்துறையின் அறிவிப்புக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயத்தில் லாபம் பெற முடியாமல், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் இருப்பதாலேயே, தமிழக அரசு அவ்வப்போது பயிர் கடன் தள்ளுபடி செய்கிறது. தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாமல், விவசாயிகள் 'சிபில் ஸ்கோர்' பிரச்னையில் தற்போது சிக்கியுள்ளனர்.