கன்னியாகுமரியில் முக்கிய பணப்பயிராக தென்னை விவசாயம் உள்ளது. சபரிமலை சீசன், பொங்கல் உள்ளிட்ட பண்டிகையால் தேவைக்கு தேங்காய் கிடைக்காத சூழலில் அதன் விலை ஏறியது. இதனால் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கிலோ ரூ.58-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. வியாபாரிகள் கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்கின்றனர். தேங்காய் விலை கடந்த ஆண்டு இருந்ததை விட இரட்டிப்பாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.