சென்னை தாம்பரம் மாநகராட்சி திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயில் நிலத்தில் மக்கள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை ஆக்கிரமித்து தனியார் ஆலை அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆதரவோடு விவசாயிகள் இன்று (மே 31) நிலம் உழும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.