தேனி: முல்லைப் பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் நன்செய் நிலத்தில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பாசனத்திற்கான கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி, பழநி செய்யபட்டி வரை 17 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், குச்சனூர் வாய்க்காலில் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்தது. உடனடியாக விவசாயிகள் அதனை தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.