கேரளாவை சேர்ந்த பிரிஜித் கிருஷ்ணா என்ற நபர் 2020-ல் தனது ஐ.டி. வேலையை இழந்த நிலையில் விவசாயத்தில் இறங்கினார். அவரின் குடும்பமும் முந்திரி விவசாயக் குடும்பத்தில் இருந்தது கூடுதல் பலம் கொடுத்தது. குறைந்தபட்சம் 11 உள்ளூர் விவசாயிகளிடமிருந்து ஈரமான முந்திரிகளை வாங்கி, அவற்றை உயர்தர முளைத்த முந்திரியாக மாற்றுகிறார். தன்னுடைய உழைப்பால் கிருஷ்ணா தற்போது ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்.