ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக விவசாயி வயலில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த வீடியோ வெளியாகியுள்ளது. சென்னேகொத்தப்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த சிவய்யா என்ற விவசாயி, தனது பக்கத்து வயலில் விவசாயி சுப்பிரமணியத்தால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் வயலிலே மயங்கிவிழுந்த அவரை அருகில் இருந்த உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.