2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தவெக தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் பல்வேறு பிரபலங்கள் விஜய் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், முன்னாள் நீதிபதி சுபாஷ் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் ரோகிணி சில்வர் ஸ்கிரீன்ஸ் உரிமையாளர் ரேவந்த சரண், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.