பிரபல பாடலாசிரியர் சினேகன் - கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சினேகன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், "தாயே எந்தன் மகளாகவும்.. மகளே எந்தன் தாயாகவும். இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள். இதயமும்,மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.