பிரபல ஹாலிவுட் நடிகை வலேரி மஹாஃபி காலமானார்

69பார்த்தது
பிரபல ஹாலிவுட் நடிகை வலேரி மஹாஃபி காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகை வலேரி மஹாஃபி (71) காலமானார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 1977 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த வலேரி, 50க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். 'தி டாக்டர்ஸ்' மற்றும் 'நார்தர்ன் எக்ஸ்போஷர்' தொடரில் சிறந்த நடிப்பிற்காக விருதுகளை வென்றார். 'பிக் ஸ்கை', 'யங் ஷெல்டன்', 'விங்ஸ்' மற்றும் 'சிஎஸ்ஐ' தொடர்களிலும் முன்னணி வேடங்களில் நடித்தார்.

தொடர்புடைய செய்தி