நாட்டையே துயரில் ஆழ்த்திய அகமதாபாத் விமான விபத்து, '12th ஃபெயில்' படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நண்பரான விமானி கிளைவ் குந்தரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். முதலில் இறந்தது நடிகரின் உறவினர் எனத் தகவல் பரவிய இலையில், கிளைவ் குந்தர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ராந்த் விளக்கம் அளித்துள்ளார்.