இந்தியாவில் இருந்து ஜெருசலேமுக்கு சுற்றுலா சென்ற ராஜ்யசபா எம்.பி. வான்வேய் ராய் கர்லுகி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பெத்லகேமில் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் இருந்து ராஜ்யசபாவில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற கர்லுகி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஜெருசலேம் சென்றார். இந்த நிலையில், அவர்கள் இஸ்ரேலில் சிக்கியுள்ளனர். அவர்களுடன் மேலும் 24 இந்தியர்களும் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.