கர்நாடகா: சந்தோஷ் - ரேணுகா தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதை காரணம் காட்டி ரேணுகாவிடம் அவரின் கணவர், மாமியார், மாமனார் சண்டை போட்டு வந்தனர். இந்நிலையில் மருமகளை கொலை செய்ய முடிவெடுத்து மூவரும் சேர்ந்து பெரிய கல்லை மேலே போட்டும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர். இதை விபத்து போல மாற்ற முயற்சித்த போதும் போலீசாரின் தீவிர விசாரணையை தொடர்ந்து மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.