கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தை சேர்ந்த தாயப்பா தனது குடும்பத்தினருடன் கரகா கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றார். அப்போது குட்லிகி நோக்கி சென்ற கார் ஒன்று அவர்கள் வந்த பைக்கில் மோதியதில் காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இதில் தயாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ராதா, குழந்தைகள் திவ்யா (10), துருவா (8) படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.