காஞ்சிபுரம்: மறைமலை நகரைச் சேர்ந்த திமுக பிரமுகருடன், மனைவிக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கணவர் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிய கணவர், தீயிட்டு கொளுத்தினார். பின்னர், மனைவியை கட்டிப் பிடித்துக் கொண்டார். இதில் இருவரும் தீயில் எரிந்தனர். உயிரிழப்பு ஏற்பட்டதா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.