கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு

60பார்த்தது
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு
தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) வாயிலாக தொடங்கியது. விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி