துருக்கி: பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள கரேசி என்ற இடத்தில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இசட்எஸ்ஆர் வெடிமருந்து தயாரிப்பு பிரிவில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டிட இடிபாடுகள் மற்றும் தீயில் உடல் கருகி 12 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.