உ.பி: பாராபங்கி மாவட்டத்தில் நோயாளி ஒருவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த அவ்னிஷ் பால் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போனில் திடீரென புகை வெளியானது. மொபைலை அவர் எடுக்க முயன்றபோது திடீரென வெடித்துச் சிதறியது. இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைத்து அவ்னிஷை காப்பாற்றினர்.