தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மதுக்கடைக்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்த விலை உயர்ந்த மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர். வாரங்கல் மாவட்டம் பர்வதகிரி மண்டல மையத்தில் அமைந்துள்ள மதுக்கடையில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. மறுநாள் கடைக்குச் சென்ற ஊழியர்கள், திருட்டு நடந்ததை அறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில், ரூ.51,000 ரொக்கமும், ரூ.33,400 மதிப்புள்ள மது பாட்டில்களும் திருடுபோனது தெரியவந்துள்ளது.