பரபரப்பு.. சகதியில் சிக்கி துடிதுடித்து பலி!

5798பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் கிணற்று சகதியில் சிக்கியவர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை அருகே மண்பத்தையை சேர்ந்த ஜான் வில்லியம் என்பவர் நேற்று காலை 11 மணியளவில் அவருக்கு சொந்தமான வட்ட கிணற்றில் மோட்டார் பழுது வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக கிணற்றில் விழுந்ததில் சகதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் ஜான் வில்லியம் உடலை மீட்டு மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி