தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் - திருமாவளவன் வேண்டுகோள்!

77பார்த்தது
தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் - திருமாவளவன் வேண்டுகோள்!
தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடும்புயல், பெருவெள்ளம் ஆகிய இயற்கை பேரிடரால் இன்னும் அந்த அவலத்திலிருந்து மக்களால் மீண்டுவர இயலவில்லை. இந்நிலையில், தமிழக அரசு பொதுத் தேர்வாணையம் ஜனவரி 06, 07 தேதிகளில் 'ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களை' நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை இன்னும் சில வாரங்களுக்குப் பின்னர் நடத்தும் வகையில் தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.