தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ஆம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.