விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் தார் தொட்டியில் போட்டு எரிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி (62). இவருக்கும் பாண்டி (28), ராம்குமார் (27) என்ற இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் துரைப்பாண்டியை தனியே வரவைத்து இவர்கள் கொலை செய்துள்ளனர். கொலை செய்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.