இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைகளின் அதிகாரிகள் கூறும்போது, "எங்களுடைய மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை. பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமான சர்கோதா விமான தளம் அழிக்கப்பட்டுள்ளது" என கூறினர். விமான தளம் அழிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.