காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று (டிச.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் தேர்தல் போட்டி கடுமையாகத்தான் இருக்கும். விஜய் தேர்தல் பணி செய்யும்போது மற்றவர்கள் தூங்கவா போவார்கள். மற்றவர்களும் வேகமாக தேர்தல் பணி செய்வார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “காலணி அணியாமல் இருந்தால் காலுக்கும் உடலுக்கு நல்லது என்று அண்ணாமலைக்கு யாரும் கூறினார்களா?, இதுதான் போராட்ட யுக்தியா?” என்றார்.