இஸ்ரேல் நடத்தும் வான்வழி தாக்குதலால் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறினர். 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சம் என தகவல் வெளியாகியுள்ளது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று இரவில் காசாவில் உள்ள 200 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, காசாவின் நாடாளுமன்றத்தில் இருந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தினால், அரசு கட்டடங்கள் ராணுவ இலக்காகும். போதிய நேரமில்லாததால் இலக்கைக் குறி வைக்கும் முன்பாக எச்சரிக்கை விடுப்பது சந்தேகமே என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.