சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்கசமுத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 40), பந்தல் தொழிலாளி. திருமணம் ஆகாதவர். கொமராபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் தொழிலாளி. இந்த நிலை தங்கராஜுக்கும், ராஜேஷ் மனைவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்தும் தங்கராஜை ராஜேஷ் கண்டித்தும் மிரட்டியும் வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்கராஜ் நேற்று காலை வேலைக்கு செல்ல சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ் தங்கராஜை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அருகே இருந்த அவருடைய நண்பர் பழனிச்சாமிக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த இரண்டு பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.