பண்ணாரி ரோட்டில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து

8674பார்த்தது
பண்ணாரி ரோட்டில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து சத்தியமங்கலம் அருகே திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து காரணமாக பண்ணாரி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் வெட்டப்படும் கரும்புகள் லாரியில் ஏற்றிக்கொண்டு தனியார் கரும்பு ஆலைக்கு லாரி சென்று கொண்டு இருந்தது. லாரியானது, சத்தி - பண்ணாரி ரோட்டில் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கார் ஷோரும் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தின் மேல் கவிழ்ந்து லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகன ஓட்டிகள் காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்தும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் காரணமாக பண்ணாரி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி