மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும், உபரி நீர் திறக்கப்படும் நிலை உள்ளது. இதனால் காவிரி கரை யோர மக்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர் வாகங்கள் எச்சரிக்கை விடுத்து, உஷார் செய்து வருகின்றன. இதன்படி ஈரோடு மாவட்ட நிர்வாகமும், கரையோரத்தில் உள்ள மக்களை எச்சரித்து, பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தர வுப்படி, கொடுமுடி காவிரி ஆற்றங்கரை மற்றும் புகளூரான் வாய்க்கால் கரை யோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடுமுடி காவிரி ஆற்றங்கரை, புகளூரான் வாய்க்கால் கரை பகுதிகளில், ஆர். டி. ஓ. , சதீஷ் குமார் நேற்று ஆய்வு செய்தார். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்கும் வைக்கும் மண்டபத்தில் மண்டபத்தில் ஆய்வு செய்து அடிப்படை வசதி உள் ளதா என்பதை பார்வையிட்டார். அவ ருடன் கொடுமுடி தாசில்தார் பாலமுரு காயி, துணை தாசில்தார்கள், ஆர். ஐ, , கிராம நிர்வாக அலுவலர்கள், கொடு முடி பேரூராட்சி மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.