அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட இடம் கேட்டு மனு

265பார்த்தது
அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட இடம் கேட்டு மனு
சத்தியில் அங்கன்வாடி மையம் கட்ட இடம் கேட்டு பாஜக கவுன்சிலர் நகர்மன்ற தலைவரிடம் மனு சத்தியமங்கலம் நகராட்சி உட்பட்ட 23 வது வார்டில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றன. வாடகை கட்டிடத்தில் உள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்த காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளும், பெற்றோரும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் 23 வார்டு பாஜக கவுன்சிலர் அரவிந்த் சாகரிடம் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் வாடகை கட்டிடத்திற்கு பதில் புதிய கட்டிடம் கட்டவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாஜக கவுன்சிலர் அரவிந்த் சாகார் குறித்து சத்தியமங்கலம், நகர்மன்ற தலைவர் ஜானகி ராமசாமியிடம் நேற்று மனு கொடுத்தார். அதில் தனது வார்டில் செயல்பட்டு வரும் அங்கனவாடி மையம் கட்டிடம் சேதமடைந்து இருபபதாகவும், மேலும் வாடகை கட்டிடம் என்பதால் புதிய கட்டிடம் கட்டிகொள்ள என வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம் கொடுத்தால் இப்பகுதி மக்களின் பங்களிப்புடன் புதிய அங்கன்வாடி மையத்தை கட்டி கொள்வதாக கூறி மனு கொடுத்தார். உடன் ஆனையாளர் செல்வம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி