மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

5767பார்த்தது
மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சையும் புளியம்பட்டி அருகே உள்ள காரப்படியைச் சேர்ந்தவர் கவியரசு(வயது 45). இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கவியரசு மின்மோட்டார் பழுது பார்க்கும் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கவியரசு புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள குமார கவுண்டன்பாளையத்தில் துரைசாமியின் உங்களுடைய தோட்டத்தில் பழுதான கிணற்று மோட்டாரை பழுதி நீக்க சென்றார். மின்மோட்டார் பழுது நீக்கி கொண்டிருக்கும் போது எதிர்பாராத வகையில் கவியரசு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார் உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி