ஈரோடு மாவட்டத்தில் வரும், 10ம் தேதி, கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்குகிறது.
கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்பு துறை மூலம், இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்தாண்டில் வரும், 10ம் தேதி முதல் ஜூலை, 10 வரை தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்கள், குக்கிராமங்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், தடுப்பூசி முகாம் நடக்கிறது. கால்நடை வளர்ப்போர் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.