வனக்குட்டையில் தண்ணீர் குடிக்கும் யானை மற்றும் குட்டியானை.

62பார்த்தது
வனக்குட்டையில் தண்ணீர் குடிக்கும் யானை மற்றும் குட்டியானை.
சத்தி அருகே பண்ணாரி வனக்குட்டையில் தண்ணீர் குடிக்கும் யானைகள்


பண்ணாரி அருகே
வனக்குட்டையில் குட்டியுடன் தண்ணீர் குடிக்கும் யானை
சத்தி புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் யானை, மான்கள், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைகாலம் துவக்கும் முன்பே மத்தியான நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் வறட்சி ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சனையும் உணவு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகளில் தண்ணீர் வற்ற தொடங்கியுள்ளதால் நீரின் அளவு குறைந்து வருகிறது.
வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பகல் நேரங்களில் வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்கிறது. இந்நிலையில் பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டையில் யானை ஒன்று குட்டி யானையுடன் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதை சிலர் போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சி வைரலாகி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி