சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் மற்றும் சாரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி இன்று காலை எஸ் ஆர் டி கார்னர் அருகில் இருந்து மணிகூண்டு வரை மாணவ மாணவிகள் ஆசிரிய பெருமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஜபேரணியை சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவி ஜானகிராமசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் எஸ் ஆர் டி கார்னரில் இருந்து மைசூர் ட்ரங் சாலை வழியாக மணிகூண்டு வரை நடைபெற்றது. மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய விளம்பர பாதகைகள் கையில் ஏந்தி மக்களிடம் துண்டு பிரசாரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.