கடம்பூர் மலைப்பாதை தடுப்புச்சுவரில் சிறுத்தைப்புலி படுத்து ஒய்வு எடுக்கும் வீடியோ சமூக வலைங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி, மான்கள் காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் குடி மற்றும் உணவு தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் குடிநீர் தேடிச் செல்வது வழக்கம்.
இந்தநிலையில் புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலர் சத்தியமங்கலம் அருகே |உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நடைபெற்ற |திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். விழா முடிந்ததும் இரவில் கடம்பூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது கடம்பூர் மலைப்பாதையின் தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தைப்புலி படுத்திருந்தது. | சிறுத்தைப்புலியை பார்த்த உடன் அச்சம் அடைந்த அவர்கள் காரை சிறிதுதூரம் தள்ளி நிறுத்திசெல்போணி ல் படம் எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.