பெருந்துறை - Perundurai

ஈரோடு: வலிப்பு ஏற்பட்டு சமையல் தொழிலாளி பலி

ஈரோடு: வலிப்பு ஏற்பட்டு சமையல் தொழிலாளி பலி

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள முகாசி பிடாரியூர், கூரபாளையம், ஏ. டி. காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி (45). இவர், பெருந்துறை சிப்காட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் கடந்த 2 மாதங்களாக சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (நவம்பர் 10) காலை துரைசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மதியம் 1 மணியளவில் திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தினர் உடனடியாக அவரை மீட்டு, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே துரைசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా